Top News

சற்றுமுன் வெளியான பெரு மகிழ்ச்சித்தகவல் 50 லட்சம் ரூபாய் வீடமைப்ப்பு திட்டம் அறிமுகம்

 

டிட்வா சூறாவளியினால் பெருந்தோட்டப் பகுதிகளில் லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான 50 இலட்சம் ரூபாய் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.


நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இந்த விடயத்தினை தெரிவித்தார்.

டிட்வா சூறாவளியினால் வீடுகளை முற்றாக இழந்த மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


குறிப்பாக, தங்களுடைய சொந்த காணியில் வீடுகளை நிர்மாணித்திருந்த மக்களுக்கே இந்த நிதி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


ஆனால், பெருந்தோட்டப் பகுதிகளில் லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு தங்களுக்கென்று சொந்தமான இடமில்லை. அதனால், 50 இலட்சம் ரூபாய் நிதியினை வழங்க முடியாது போனதாகவும் அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.


200 வருடங்களாக இந்த நாட்டில் வாழும் மலையக மக்களுக்கென சொந்தமான காணியோ அல்லது வீடோ இல்லாமல் இருக்கின்றனர்.

எனவே, டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையகம் மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையின் ஊடாக முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

அதற்கமைய, லயன் அறையில் வாழும் தங்களுடைய வீடு முற்றாகச் சேதமடைந்திருந்தால், குறித்த லயன் வீடு அதிக ஆபத்தான பகுதியில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டால் அல்லது குறித்த லயன் அறையில் உள்ள வீடுகளைப் புனரமைப்பதில் எந்தவித பயனும் இல்லை என்று தீர்மானித்தால் அவர்களுக்கு இந்த 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.


அவர்களுக்குக் காணி உரித்துடன் 10 பேர்ச் காணியில் 50 இலட்சம் பெறுமதியான வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு, வழங்கப்படும் என்று அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

அதேபோன்று, அவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபாயில் வேறு இடத்தில் வீடொன்றினை கொள்வனவு செய்யவோ அல்லது தங்களுக்கு வேறு இடத்தில் காணி இருக்குமாக இருந்தால் அங்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, பகுதியளவில் தேசமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியும் மலையகத்தில் லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.


அந்த வீடு அவர்களுக்கு உரிமையானதல்ல என்பதால் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இந்த நிலையில், லயன் அறைகளில் வாழும் மக்களின் வீடுகள் பகுதியளவில் தேசமடைந்திருந்தால் அந்த வீட்டினையும் புனரமைத்து வழங்குவதற்கு அமைச்சரவையின் ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன உறுதியளித்துள்ளார்.


Previous Post Next Post