விஜய்யை விமர்சித்த பிரகாஷ்ராஜ் : மேடையில் வைத்தே வறுத்தெடுத்த நடிகை அம்பிகா!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
எம்.ஜி.ஆர்-க்கு பிறகு விஜய்யின் வருகைக்குப் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது கருத்தில், "விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை. சினிமாவில் வேண்டுமானால் அவர் முதல்வராகலாம், நிஜத்தில் அது முடியாது. ஒரு நடிகரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு மூத்த நடிகை அம்பிகா தற்போது பகிரங்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அவர் கூறியதாவது,
"அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் முதல் இன்றைய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வரை அனைவரும் சினிமா பின்னணி கொண்டவர்கள் இல்லையா?"
"ஒருவேளை ரஜினியோ அல்லது கமலோ முதல்வரானால் உங்களுக்குச் சம்மதமா?"
"விஜய்யின் வளர்ச்சியைப் பார்த்து உங்களுக்குப் பொறாமையா அல்லது வருத்தமா?" எனச் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலில் தடம் பதிக்கத் தயாராகி வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த இரு மூத்த கலைஞர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.இதையும் பார்க்கவும்...
