TAMIL VIRAL MEDIA

கழிவு நீரில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

 

இன்று (13) பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியொன்றில் இருந்து சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலை ஊழியர் ஒருவர் குறித்த தொட்டியில் சிசுவின் சடலம் இருப்பதை கவனித்து, உடனடியாக அதனை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இந்தச் சிசு யாருடையது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இன்று மாலை இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கே.பி.பி. பத்திரண தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.