அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு வெளியான சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவுகள் இன்று (22) வங்கிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 முதியவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 72,525 முதியவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
தகுதியுள்ள பயனாளிகள் தங்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக நாளை முதல் இந்தக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது
