Top News

ஜனநாயகன் படத்தை போல் தமிழர்பகுதியில் நடந்த சம்பவம் நீதிமன்றம் காட்டிய அதிரடி

 

கொரியர் சேவை ஊடாக சூட்சுமமாக கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


கடந்த புதன்கிழமை(8) மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் கைதான சந்தேக நபர் அன்றைய தினம் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது 120 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறும் ஏப்ரல் 13 ஆம் திகதி மன்றில் மீண்டும் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


இதற்கமைய நேற்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சந்தேக நபரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதிவான் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.

இதன் போது 43 வயதுடைய தோடம்பழம் சுயேட்சைக் குழுவின் காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினராக செயற்பட்டவர்ரே கைது செய்யப்பட்டிருந்ததுடன் குறித்த கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் 107 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டிருந்தது.


அத்துடன் இலத்திரனியல் தராசு, 2 கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், கொரியர் ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.

Previous Post Next Post