Top News

அரச ஊழியர்களுக்கு சற்றுமுன் வெளியான பெரு மகிழ்ச்சித்தகவல்

 

அரச ஊழியர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 2026 ஆம் ஆண்டிலும் அவர்களுக்கு அதிகபட்சமாக 5 இலட்சம் ரூபா வரை விசேட கடன்களை சலுகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


தற்போதைய வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டும், அரச ஊழியர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பக்கபலமாக இருப்பதற்காகவும் கடந்த வருடங்களில் சலுகை வட்டி வீதத்தில் இவ்வாறான விசேட கடன் வசதிகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தை மேலும் நீடித்து 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இக்கடன் திட்டத்திற்கான வட்டி வீதத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் மானியமாக ஏற்கும் சிறப்பு முறைமையொன்றும் இதன்கீழ் உருவாக்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் பிரதான வங்கிகளான இலங்கை வங்கி , மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் கூட்டாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தற்போது முழுமையான உடன்பாட்டை வழங்கியுள்ளது.

Previous Post Next Post