ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது நர்மதா என்பவர், திருநம்பி ஒருவருடன் உடலுறவுக்கு சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நர்மதா ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து, இரு கணவர்களையும் விவாகரத்து செய்து, தந்தையுடன் வாங்கியிருந்தார். சம்பவத்தன்று பெருந்துறை பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு செல்லும் மினி பஸ்ஸில் 17 வயது திருநம்பியை ஆண் என்று நினைத்து சந்தித்தார்.
இருவருக்கும் இடையே பேச்சு மூலம் நெருக்கம் ஏற்பட்டது. இரவு ஒன்றாக இருக்கலாம் என முடிவு செய்து, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இறங்கினர்.
அங்கு திருநம்பியின் நண்பர்களை அறிமுகப்படுத்தி, டீ, கூல் டிரிங்க்ஸ், புரோட்டா உள்ளிட்டவை வாங்கி இரவு 11 மணி வரை பஸ் ஸ்டாண்டில் சுற்றினர். பின்னர் கால் டாக்ஸி புக் செய்து ரங்காபாளையம் அவுட்டர் ரிங் ரோடு அருகே உள்ள புதர்க்கு சென்றனர்.
அங்கு உடலுறவுக்கு தயாரானபோது, திருநம்பியிடம் ஆணுறுப்பு இல்லை என்பதை அறிந்த நர்மதா, “என்னை ஏமாற்றிவிட்டாய், ஆணுறுப்பு இல்லாத நீ எப்படி என்னை திருப்திப்படுத்துவாய்?” நீ முழுமையான ஆண் இல்லையா? என கோபமாகக் கேட்டு, திருநம்பியின் பாலினத்தையும், திருநங்கை சமூகத்தையும் தவறாகப் பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த 17 வயது திருநம்பி, நர்மதாவை தள்ளிவிட்டார். நர்மதாவின் தலை பக்கத்திலிருந்த கல்லில் மோதி மயக்கமடைந்தது.
“உயிரோடு விட்டால் போலீஸ் பிரச்சனை வரும்” என பயந்த திருநம்பி, அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து நர்மதாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நர்மதாவின் தலை உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு திருநம்பி, அருகிலிருந்த தனது அண்ணன் என அழைக்கப்படும் திருநங்கையை அழைத்து, உடலை அங்கேயே விட்டுவிட்டு லாட்ஜ் ஒன்றுக்கு சென்று தங்கினார்.
அடுத்த நாள் காலை லாரி டிரைவர் ஒருவர் புதருக்குள் சென்றபோது உடலைப் பார்த்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார்.
ஈரோடு போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நர்மதாவும் திருநம்பியும் கால் டாக்ஸியில் ஏறிய காட்சியை கண்டுபிடித்தனர்.
பஸ் ஸ்டாண்டில் சுற்றும் திருநங்கைகளிடம் விசாரித்தபோது, கொலையாளி யார் என அடையாளம் காணப்பட்டது. 10 நாட்களுக்குப் பிறகு ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள லாட்ஜில் தங்கியிருந்த திருநம்பியை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் திருநம்பி முழுமையாக ஒப்புக்கொண்டார். “மினி பஸ்ஸில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன். நர்மதா என்னை அழைத்தார். இரவு ஒன்றாக இருக்கலாம் என சென்றோம்.
ஆனால் அங்கு என்னை கிண்டல் செய்தார். ஆத்திரத்தில் தள்ளிவிட்டேன். மயக்கத்தில் இருந்ததால் கல்லால் அடித்துக் கொன்றேன்” என வாக்குமூலம் அளித்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நர்மதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இத்தகைய தகாத உறவுகள், உடலுறவு சம்பந்தமான எதிர்பார்ப்புகள், அவசர முடிவுகள் ஆகியவை உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கின்றன. பெண்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பான, சட்டபூர்வமான உறவுகளையே விரும்ப வேண்டும்.
அந்நியர்களுடன் இரவு நேர பயணங்கள், தனிமையில் சந்திப்புகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது உயிர் காக்கும். ஈரோடு போலீஸார் வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
