TAMIL VIRAL MEDIA

வீதியில் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பதற வைக்கும் சம்பவம்

 

இந்தியாவின் இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் வீதியில் வீதியின் சென்றபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

சியா குலேரியா எனும் மணவி , வழமைபோல கல்லூரிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த போதே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.


முகமூடி அணிந்து உந்துருளியில் வந்த நபர் ஒருவர், மாணவியை வழிமறித்து கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி , கீழே தள்ளி கழுத்தை வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தாக்குதலில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தை தொடர்ந்து தப்பியோட முயன்ற 32 வயதான ரிஷு பாட்டியால் என்ற நபரை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர். மாணவி கொலையால் ஆத்திரமடைந்த மக்கள் அவரைத் தடியால் தாக்கிய நிலையில் , சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து குறித்த நபரை கைது செய்தனர்.


இதனிடையே கொலைகாரன் மதுபோதைக்கு அடிமையானவர் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். தனியாக சென்ற மாணவியிடம் அவர் அத்துமீற முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


அதற்கு மறுப்பு தெரிவித்து போராடிய மாணவியை கொடூரமாக கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர் இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் வெளியிட்டு வரும் நிலையில், குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ளது.