Top News

சர்ச்சைகளுக்கு மத்தியில் மனைவியை பார்த்து மேடையில் கலங்கிய விஜய்

 

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையிலான விவாகரத்து வழக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்யின் அண்மைக்கால செயல் ஒன்று ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


1999 இல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜய்யின் திரைத்துறை வளர்ச்சியில் சங்கீதா மிகப்பெரிய தூணாக இருந்ததுடன், பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.


இவ்வாறான சூழலில், விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கீதா விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


விஜய் ஒரு பிரபல நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதனைப் பலமுறை சுட்டிக்காட்டியும் அவர் மாறவில்லை என்றும் சங்கீதா தரப்பில் கூறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, அண்மையில் நடிகை திரிஷாவுடன் ஒரே நிறத்திலான உடையில் ஒரு திருமண நிகழ்வில் விஜய் கலந்து கொண்டமையும் சர்ச்சைகளைக் கிளப்பியது.


இந்த விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், விஜய்யின் அரசியல் பரப்புரையின் போது நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த நிலையில், கன்னியாகுமரியில் இடம்பெற்ற அரசியல் பரப்புரையின் போது, ரசிகர் ஒருவர் விஜயகாந்துடன் விஜயும் சங்கீதாவும் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை பிரேம் செய்து கொண்டு வந்திருந்தார்.


கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் அந்தப் புகைப்படத்தைக் கண்டறிந்த விஜய், அதனைப் பெற்றுக்கொண்டு சில நொடிகள் ஏக்கம் நிறைந்த பார்வையுடன் உற்றுப் பார்த்தார். பின்னர், அந்தப் புகைப்படத்தைத் தனது பாதுகாவலர்களிடம் கொடுத்து வாகனத்தில் பத்திரமாக வைக்குமாறு பணித்துள்ளார்.

இந்தக் காணொளியைப் பார்த்த ரசிகர்கள், சங்கீதாவுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்பதே விஜய்யின் விருப்பமாகத் தெரிகிறது எனக் கருத்துக்களைப் பகிர்ந்து வருவதுடன், விரைவில் இருவரும் சேர வேண்டும் என எதிர்பார்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.

Previous Post Next Post