ஐம்பதாயிரத்துக்கு பிள்ளையை விற்ற குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்
பெற்று வளர்த்த பிள்ளையை இன்னொருவருக்கு விற்குமளவுக்கு எங்கிருந்து வந்தது இந்த பாழ்பட்ட மனசு?
வெறும் ஐம்பதாயிரத்துக்கு பிள்ளையை விற்பதென்பது, அது பெண்பிள்ளை என்பதாலா? அல்லது கொடிய வறுமை காரணத்தாலா?
பெற்றோர்க்கு பிள்ளையைவிட ஒரு உயர்ந்த சொத்து வேறுண்டோ?
கடவுளே, எங்கே செல்கிறது எங்கள் தேசத்தின் மாண்புகள்? ☹️☹️
செய்தி: கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தாய் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் துரிதமாக செயல்பட்டு சம்பவத்தை முறியடித்தனர். குழந்தை மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பாதுகாப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


