TAMIL VIRAL MEDIA

உயர்கிறது எரிபொருள் விலை? பின்னணியில் இருக்கும் உண்மைக் காரணம்!

ஈரான் போர்ச்சூழலால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதால் இந்தியாவில் எரிபொருள் விலை உயருமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு சட்டமன்றத் தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் இன்று (29) மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல்கள் நிறைவுபெற்று மே 4 வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

அஸ்வெசும பயனாளர்களை இனங்காண புதிய நடைமுறை! நீங்களும் நீக்கப்படலாம்?இந்நிலையில் இன்று மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்தும் என தகவல்கள் பரவின. இதுகுறித்து மத்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவிக்கையில், "விலை எதுவும் உயர்த்தப்படவில்லை, எனவே மக்கள் தேவையில்லாமல் அச்சப்படத் தேவையில்லை" என்று உறுதி அளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றங்கள் இருந்தாலும், இந்தியாவில் பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு கொள்கலன்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. வீட்டு உபயோகம் மற்றும் போக்குவரத்துக்குத் தேவைப்படும் எரிவாயு விநியோகம் 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் 70 சதவீதம் வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தும் 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விநியோகத்தை அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது.