Top News

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு



சீன மக்கள் குடியரசின் நன்கொடையாகக் கிடைத்த 2026-ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்க மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்கள், அரச அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களின் கல்வி கற்கும் பிக்குகள் என 2026-ஆம் ஆண்டிற்காகத் தேவைப்படும் மொத்த சீருடைத் துணி அளவான 11.484 மில்லியன் மீற்றர் துணிகளை சீன மக்கள் குடியரசு நன்கொடையாக வழங்கியிருந்தது. நாடளாவிய ரீதியில் உள்ள 4,418,404 மாணவர்களுக்காக இந்த சீருடைத் துணிகள் அனைத்தும் தற்போது விநியோகிக்கப்பட்டு முடிந்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது

Previous Post Next Post