வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 29 வயது கிருஷ்ணமூர்த்தி (தந்தை: ராஜேந்திரன், ஆந்திரா குப்பம் பகுதி) என்பவர், பெங்களூரில் கட்டிடத் தொழிலில் மேஸ்திரியாகப் பணியாற்றி வந்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்த 23 வயது மோனிஷாவுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயது மகள் மற்றும் 4 வயது மகன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு, கிருஷ்ணமூர்த்தியுடன் பெங்களூரில் வேலை பார்த்த அன்பழகன் என்பவருடன் மோனிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக மாறியது.
இதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி, மோனிஷாவையும் குழந்தைகளையும் அவரது தாய் வீட்டுக்கு (மேல்பள்ளிப்பட்டு) அனுப்பி வைத்தார். அதன் பின்னர், வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை குழந்தைகளைப் பார்க்க ஊருக்கு வந்து சென்று வந்தார்.
ஆனால், மோனிஷா தனது கள்ளக்காதலான அன்பழகனை அவ்வப்போது கிராமத்துக்கு வரவழைத்து சந்தித்து வந்தார். இதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரில் உள்ள வேலையை விட்டுவிட்டு, மனைவியின் தாய் வீட்டிலேயே தங்கி வந்தார்.
அப்போது அவர் மது அடிமையாகி, மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பணத் தேவை காரணமாக மீண்டும் பெங்களூருக்கு வேலைக்குச் சென்றார்.
இந்நிலையில், கணவரின் இடையூறைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த மோனிஷா, கள்ளக்காதலன் அன்பழகனுடன் சேர்ந்து கொலைத் திட்டம் தீட்டினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, வழக்கம் போல் விடுமுறைக்கு வந்த கிருஷ்ணமூர்த்திக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தார்.
சாப்பிடும் போது வித்தியாசமான சுவையை உணர்ந்த கிருஷ்ணமூர்த்தி தயங்கி தயங்கி சாப்பிட்டுள்ளார், இதை பார்த்த மோனிஷா கூச்சப்படாம உள்ள விடுங்க மாமா.. உங்களுக்காக ஆசையா பண்ணேன்.. என்று தூபம் போட்டுள்ளார்.
மொத்தம் 18 தூக்க மாத்திரைகள் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணமூர்ர்து மயக்கம் அடைந்ததும், அன்பழகனுக்கு தகவல் தெரிவித்து அவரை வீட்டுக்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
கொலைக்குப் பிறகு, மறுநாள் காலை, அக்கம் பக்கத்தினரிடம் “கணவர் ரத்த வாந்தி எடுத்து இறந்துவிட்டார்” என்று நாடகமாடினார் மோனிஷா.
இந்த சம்பவத்தில் சந்தேகம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியின் தந்தை ராஜேந்திரன், போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மோனிஷாவின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொலை செய்தது உறுதியானது.
அம்மா வாங்கம்மா வீட்டுக்கு போகலாம் என போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்கும் இரண்டு குழந்தைகள்
மேலும், சடலத்தை அருகில் வைத்துக்கொண்டு இருவரும் காதல் லீலைகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் மோனிஷா, அன்பழகன் மற்றும் உடந்தையாக இருந்த சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
