மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி,
பிரென்ட் (Brent) மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் 101.9 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
WTI ரக மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் 103.6 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இராஜதந்திர மோதல்கள் மற்றும் இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் காரணமாக எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதன் நேரடி விளைவாகவே விலைகள் 100 டொலரைக் கடந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திடீர் விலை உயர்வு காரணமாக ஏனைய நாடுகளிலும் எரிபொருள் விலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிலைமை தொடருமானால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
