TAMIL VIRAL MEDIA

சற்றுமுன் யாழில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அதிரடி கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், இளவாலை - பெரியவிளான் பகுதியில் அர்ச்சுனாவுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு பெண்களுடன் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 