TAMIL VIRAL MEDIA

பெண்கள் தொடர்பில் சற்றுமுன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்

 

கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாக உள்ள பெண்களின் வேதனமற்ற பராமரிப்புப் பணிகளுக்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பராமரிப்புச் சேவைகள் பொருளாதார மற்றும் சமூகச் செயற்பாடுகளுக்குப் பங்களிக்கும் அடிப்படை அம்சங்களாக இருப்பதால், அதனை இனியும் புறக்கணிக்க முடியாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டுப் பணி, சிறுவர் மற்றும் முதியோர் பராமரிப்பு அல்லது சமூக ஒத்துழைப்பு என எதுவாக இருப்பினும், அவை முறைசார்ந்த மற்றும் முறைசாரா பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேதனமற்ற பராமரிப்புச் சேவைகள் மூலமாக பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை இனங்காண வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளானது பெண்கள் தொழில் சந்தையில் நுழைவதற்குப் பெரும் தடையாக உள்ளது. உற்பத்தித்திறன் மிக்க உழைப்பு என்பதை ஊதியம் பெறும் பணிகளாக மாத்திரம் வரையறுத்தல் பொருத்தமற்றது.

ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளானது பெண்கள் தொழில் சந்தையில் நுழைவதற்குப் பெரும் தடையாக உள்ளது. உற்பத்தித்திறன் மிக்க உழைப்பு என்பதை ஊதியம் பெறும் பணிகளாக மாத்திரம் வரையறுத்தல் பொருத்தமற்றது.

எனவே, பெண்கள் தொழில் சந்தையில் இணைவதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.