TAMIL VIRAL MEDIA

சார்ஜ் செய்து கொண்டு தொலைபேசி பயன்படுத்திய 26 வயது யுவதிக்கு நேர்ந்த துயரம்

 


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இடி மின்னல் தாக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், கைப்பேசியை #சார்ஜ் (Charge) செய்தவாறு பயன்படுத்திய இளம்பெண் ஒருவர் மின்னல் தாக்கி #உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது.


இன்று (03) ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 2 யுவதிகள், தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்னல் #தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 


அவர்களில் #யுவதி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது ஏற்கனவே #உயிரிழந்திருந்தார். மற்றொரு பெண் கடுமையான தீக்காயங்களுடன் கராபிட்டிய தேசிய மருத்துவமனையின் #அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


#உயிரிழந்தவர் கொக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.


↪இடி மின்னல் நேரத்தில் தொலைபேசி பயன்படுத்தும் போது இதை சிந்தியுங்கள்👇


🛑🛑மின்னல் ஒரு மின் கம்பியையோ அல்லது மின் மாற்றியையோ (Transformer) தாக்கும் போது, அந்த உயர் மின்னழுத்தம் (High Voltage) மின்சாரக் கம்பிகள் வழியாக உங்கள் #வீட்டிற்குள் நுழையும். அப்போது கைத்தொலைபேசி சார்ஜரில் இணைக்கப்பட்டிருக்கும் போது, அந்த #மின்சாரம் சார்ஜர் வழியாக கைத்தொலைபேசிக்கும், அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் #உடலுக்கும் மிக வேகமாகப் பாயும், அதிகப்படியான மின்னழுத்தம் காரணமாக அலைபேசியின் மின்கலம் (Battery) #வெடிக்கக்கூடும் அல்லது மின்சாரம் தாக்கி #இதயம் செயலிழக்கக்கூடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள்.


↪பின்பற்ற வேண்டிய முறைகள்👇👇


🛑இடிச் சத்தம் கேட்க ஆரம்பித்தாலே கைத்தொலைபேசி சார்ஜர்கள், தொலைக்காட்சி, கணினி போன்ற மின்சாதனங்களின் பிளக்-குகளை மின்சாரப் புள்ளிகளிலிருந்து (Socket) அகற்றிவிடுங்கள். வெறும் சுவிட்சை (Switch) ஆஃப் செய்வது மட்டும் போதாது.


🛑மின்னல் நேரத்தில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மிக அவசரமான அழைப்பு என்றால் மட்டும், சார்ஜரில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் பயன்படுத்தவும்.


🛑கட்டிடங்களின் சுவர்களில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வழியாக மின்னல் கடத்தப்படலாம் என்பதால், சுவர்களில் சாய்ந்து நின்று கைத்தொலைபேசி பேசுவதைத் தவிர்க்கவும்.


🛑மின்னல் நேரத்தில் கைத்தொலைபேசி மட்டுமல்ல, குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவதும் ஆபத்தானது.


"இடி மின்னல் நேரத்தில் அலைபேசி வேண்டாம் - அது எமனின் அழைப்பாகக் கூட இருக்கலாம்!" சிந்தித்து செயற்படுங்கள்.


✅இந்தத் தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்👍