தமிழகத்தில் சூடு பிடிக்கும் அரசியல் : அதிமுகவில் 37 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு...!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. மீண்டும் கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகி வருகிறது.
இந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட அதிமுக பெறாதநிலையில் கட்சிக்குள் இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் தொடர் தோல்வி
எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பதால் இந்த அதிருப்தி நிலவியுள்ளது. இதனால் அதிமுகவின் 28 முதல் 37 எம்.எல்.ஏ-க்கள் வரை விஜய்க்கு ஆதரவு அளிக்க ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் சூடு பிடிக்கும் அரசியல் : அதிமுகவில் 37 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு...! | Aiadmk Splitting Again
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இந்த குழுவினர் வழிநடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
விஜய் பதவியேற்பு விழாவில் மரபு மீறல் : வெடித்தது முதல் சர்ச்சை
விஜய் பதவியேற்பு விழாவில் மரபு மீறல் : வெடித்தது முதல் சர்ச்சை
விஜயை சந்திக்கும் சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள்
இந்நிலையில் இன்று இரவு விஜய்யை சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் மண்டபத்தில் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
