பாடசாலை மாணவர்களுக்கு திடீர் விடுமுறை சற்றுமுன் வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தறை மாவட்டத்தின் தெலிஜ்ஜவில ரோயல் கல்லூரியின் (Telijjawila Royal College) சில தரங்களுக்கு இன்று (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தரம் 6, 7, 8,9 மற்றும் உயர்தரம் (A/L) ஆகிய வகுப்புகளுக்கு இன்று வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு வழமைபோல் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வல கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக, தெனியாய மற்றும் சிங்கராஜ வனப்பகுதிகளில் பெய்யும் மழையினால், பிட்டபெத்தர மற்றும் அக்குரஸ்ஸ பகுதிகளில் ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
நிலவி வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
