TAMIL VIRAL MEDIA

சீரற்ற கால நிலை-பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

 

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.