பெரும்பான்மையை கைப்பற்றிய தவெக தமிழக அரசியலில் புதிய திருப்பம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M), விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது உத்தியோகபூர்வ ஆதரவை வழங்கியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது.
ஏற்கனவே 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கியிருந்த நிலையில், மேலதிக ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரியிருந்தார்.
இதனடிப்படையில், இன்று சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சிகளின் மாநிலக் குழுக் கூட்டங்களின் முடிவில் இந்த ஆதரவுத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) முதலில் தனது ஆதரவை அறிவித்த நிலையில், தற்போது 2 உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI-M) விஜய்க்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது ஆதரவை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 120 ஆசனங்களுடன் தமிழக வெற்றிக் கழகம் தமிழ் நாட்டில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது
