TAMIL VIRAL MEDIA

விஜய் இடத்தில் நடிகை திரிஷாவா ?நடக்கப்போவது என்ன!

 

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் நேரிடும்.


இதனால் விஜய்யின் இடத்தில் நடிகை திரிஷா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடிப்படையில் விஜயின் தவெக முன்னிலையிலும் இரண்டாவதாக திமுகவும், மூன்றாவதாக அதிமுகவும் உள்ளன

.

அதேபோல் தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 32,792 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.


திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 20,777 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதே டிரெண்ட் தொடரும் பட்சத்தில் விஜய் இந்த இரு தொகுதியிலும் வெல்லக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.

அப்படி வெற்றி பெற்றால், விஜய் ஒரு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். பெரும்பாலும் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்று கருதப்படுகிறது.


அப்படி ராஜினாமா செய்தால், அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் வரும். இந்த இடைத்தேர்தலில் விஜய்யின் இடத்தில் நடிகை திரிஷா போட்டியிடக் கூடும் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.