TAMIL VIRAL MEDIA

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி ; செல்வத்தை அள்ளி செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

 

வேத ஜோதிடத்தின் படி, அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் கிரகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்களைச் செய்கிறது. இவ்வாறான மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், சுக்கிரன் மே 8ஆம் திகதி மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக செவ்வாய் கிரகம் கருதப்படுகிறது. சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரவுள்ளதாக ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.


மே 8ஆம் திகதி முதல் மே 20ஆம் திகதி வரை சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த காலப்பகுதியில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவார்கள் என ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன.

சிம்மம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் பல வழிகளில் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும். வேலையில் அலைச்சலும், கடின உழைப்பும் தேவைப்பட்டாலும், நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

கன்னி

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் செல்வம் வேகமாக உயரும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. எடுக்கும் முயற்சிகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.