TAMIL VIRAL MEDIA

பெண்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை சற்றுமுன் அரசு வெளியிட்ட மகிழ்ச்சித்தகவல்

 

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளது.


குறித்த விடயத்தை இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மருத்துவர் ருசித பெரேரா தெரிவித்துள்ளார். 


ருசித பெரேரா மேலும் தெரிவிக்கையில், "எமது சங்கத்தின் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்கும் நடைமுறையை கடந்த ஆண்டே நாம் உத்தியோகபூர்வமாக்கியுள்ளோம்.

இந்நிலையில், அரச நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறையை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோரி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, தொழில் அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளுக்கு நாம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்.

அரசு மற்றும் தனியார் துறைகள் இரண்டிலும் இந்த நடைமுறையைக் கொண்டுவர முடிந்தால் அது ஒரு பெரிய வெற்றியாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்