TAMIL VIRAL MEDIA

மனஸ்தாபத்தால் வீட்டை விட்டு வெளியேறிய ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்

 

கடும் மனஸ்தாபம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஆசிரியை ஒருவரின் சடலம், ஒரு நாளுக்கு பிறகு களுத்துறை தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மொரகஹஹேன மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியையாக பணியாற்றி வந்த பண்டாரகம, வீதியகொட, கனத்தகொட பகுதியை சேர்ந்த நதீஷானி தரங்கிகா அமரநாயக்க (42 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


ஒரு பிள்ளையின் தாயான இவரின் கணவர், பிரசித்த பாடசாலையொன்றில் நடன ஆசிரியராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.