TAMIL VIRAL MEDIA

தவெக விஜய்க்கு புதிய சிக்கல்...? ஆதரவை விலக்கி கொண்ட ஐயூஎம்எல்..?

 

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மாபெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. 30 ஆண்டுகாலமாக திமுக-வின் நிழலாகவும், நம்பிக்கைக்குரிய தோழமையாகவும் பயணித்து வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்திதாக செய்திகள் வெளியாகின.

தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முன்னதாக, தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதற்கிடையே, தலா 2 உறுப்பினர்களை கொண்ட  இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.  விசிகவும் தனது இரண்டு உறுப்பினர்களின் ஆதரவை தெரிவித்தது. இதேபோல், ஐயுஎம்எல் கட்சியும் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகின.  இதையடுத்து, தவெ.க மற்றும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரித்தது.

சில தினங்களுக்கு முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன், 30 ஆண்டு காலமாக திமுகவுடன் பயணித்துவருகிறோம். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதுவே எங்கள் நிலைபாடு எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று மாலை ஐ.யூ.எம்.எல். அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டு, அந்த முடிவை அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு இல்லை என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். எனவே, தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 118 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், தவெகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் விஜய் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.