TAMIL VIRAL MEDIA

முதலமைச்சர் வி.ஜ.ய்.யி.ன் சிற்றூர்ந்து ஓட்டுநரின் மகனுக்கு முக்கிய பதவி

 


தமிழகத்தின் 17ஆவது சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜே.சி.டி. பிரபாகர், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.


அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாத நிலையில், அவர் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டதாகத் தற்காலிகச் சபாநாயகர் கருப்பையா உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து புதிய சபாநாயகரை அவரது ஆசனத்தில் அமர வைத்தனர்.


சபாநாயகர் தெரிவைத் தொடர்ந்து மேலும் சில முக்கிய பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகின


துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் துணை சபாநாயகராக ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இதனிடையே விருகம்பாக்கம் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் அரசாங்கக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.


விசேட அம்சமாக, புதிய கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள சபரிநாதன், முதலமைச்சர் விஜய்யின் சிற்றூர்ந்து ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் ஆவர்.


முன்னதாக, நேற்றைய தினம் ஆரம்பமான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் இடைக்கால சபாநாயகர் கருப்பையா புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.