முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் விஜய் : கட்டியணைத்து வரவேற்ற உ.த.யநிதி!
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்யை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்திப்பின்போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் விஜய் சந்தித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தமை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.


