TAMIL VIRAL MEDIA

எட்டு மாவட்டங்களில் எந்தவொரு தொகுதியிலும் வெற்றிபெறாத தவெக

 

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை மாவட்டத்திலுள்ள 16 தொகுதிகளில் 14 இடங்களை தவெக கைப்பற்றியுள்ளதுடன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.




இந்த தேர்தலில் திமுகவால் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.




திமுக மற்றும் அதிமுகவின் பலம் வாய்ந்த வேட்பாளர்களைத் தவெக வீழ்த்தியிருந்தாலும், மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அந்த கட்சியால் ஒரு தொகுதியைக் கூட பெற முடியவில்லை.


அதன்படி, விழுப்புரம் (6), அரியலூர் (2), நாகப்பட்டினம் (3), மயிலாடுதுறை (3), திருவாரூர் (4), தென்காசி (5), கன்னியாகுமரி (6), மற்றும் நீலகிரி (3) ஆகிய மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு எட்டப்படவில்லை என தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன.