TAMIL VIRAL MEDIA

இலங்கையில் 2மாத பெண் குழந்தையைக் கிணற்றில் வீசிய தாய் ; தந்தையின் நெகிழ்ச்சி செயலால் மகளுக்கு நிகழ்ந்த சம்பவம்

 

எல்பிட்டிய, கஹடுவ, துடுவெகொட பகுதியில் இரண்டரை மாத பெண் குழந்தையைக் கிணற்றில் வீசிய தாய் ஒருவர், நேற்று (02) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கைது செய்யப்பட்ட தாய் தனது கைக்குழந்தையைக் கிணற்றில் வீசிவிட்டு, பின்னர் தன் மகளைக் கிணற்றில் வீசிவிட்டதாகக் கூச்சலிட்டுள்ளார். அதன் பின்னர் அவரது கணவர், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த பெண் குழந்தையை வெளியே இழுத்து, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். கணவரின் துரிதமான செயற்பாட்டால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிணறும் ஆழம் குறைவாக இருந்ததால், குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது என்றும் குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.