TAMIL VIRAL MEDIA

பாபா வங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள் ; 2026 இறுதிக்குள் அதிஷ்டம் இவர்களுக்குத்தான்

 

உலகம் முழுவதும் பல்வேறு தீர்க்கதரிசனங்களுக்காக அறியப்படும் பாபா வாங்காவின் கணிப்புகள் ஆண்டுதோறும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள் குறித்து அவர் கூறியதாக பரவி வரும் தகவல்கள் மக்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், அவர் கணித்து சொன்ன பல விஷயங்கள் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் நடந்திருப்பதை நாம் பார்க்கலாம். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டில் கடைசியில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய அளவில் கோடீஸ்வர யோகத்தை பெறப் போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு நிலையான தன்மையை பெறப்போகிறார்கள். நீண்ட நாட்கள் வாங்கிய கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட பிரிவு சரியாக மாறக்கூடிய நிலை உருவாகும். சமுதாயத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவார்கள். கன்னி: திருமண வாழ்க்கை அமையப்போகிறது. அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் எல்லாம் சரியாக அமையப் போகிறது. உடல் ரீதியாக மனரீதியாக சந்தித்து வந்த குழப்பங்களும் பிரச்சனைகளும் ஒரு முடிவை பெறப்போகிறது. குடும்பத்தினருடைய முழு ஆதரவையும் பெற்று முன்னேற்றம் அடைவீர்கள். மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு கடைசி பகுதியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக புதிய இடமாற்றத்தை கொடுக்கப் போகிறது. புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகப் போகிறது. அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் பூர்வீக சொத்துக்களை இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கைகளுக்கு வரவேண்டிய சொத்துக்கள் கைகளுக்கு வந்து சேரும்.