TAMIL VIRAL MEDIA

இன்ஸ்டா காதலனை தேடிச்சென்ற யுவதிக்கு காத்திருந்த டிவிஸ்ட்!

 

இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கமான தனது ஆண் நண்பரை நேரில் சந்திப்பதற்காக, வீட்டை விட்டு வெளியேறி கேரளா செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் , சிங்கப்பெண் அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.


இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களை தீவிரமாக நம்பி, ஆபத்துகளில் சிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையை சேர்ந்த அந்த இளம்பெண், கடந்த சில மாதங்களாக கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளார். அந்த நபரின் ஆசை வார்த்தைகளை நம்பிய பெண், பெற்றோரிடம் சொல்லாமல் ரகசியமாக கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.


திடீரென மகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல் துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.


முறைப்பாட்டினை அடுத்து உடனடியாக களம் இறங்கிய ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மொபைல் சிக்னல்களை கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.


அதிரடிப்படையினரின் மின்னல் வேக நடவடிக்கையால், அந்த பெண் கேரளா எல்லையை கடப்பதற்கு முன்பாகவே, எல்லையோர ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.