கோரவிபத்தில் தாய் மற்றும் மகளுக்கு நேர்ந்த சோகம்
புத்தளத்தில் உள்ள அனுராதபுர வீதியில், 27-வது கட்டை பகுதியில் கடந்த 1-ஆம் திகதி நிகழ்ந்த கோர விபத்தில் காயமடைந்த தாயும் அவரது இளம் மகளும் துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாக ராஜங்கனை காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான 52 வயதான சமுத்ரா அலுவிஹாரே மற்றும் அவரது மூத்த மகளும், ஒரு குழந்தைக்குத் தாயுமான 32 வயதான சஜீனி மகேஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய முச்சக்கர வாகனம்
புத்தளத்தில் உள்ள அனுராதபுர வீதியில், 27-வது கட்டை பகுதியில், தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது ஒரு முச்சக்கர வாகனம் மோதியதில் இந்த கோரமான விபத்து நிகழ்ந்தது.
