TAMIL VIRAL MEDIA

தெல்தெனிய பெண் கொலை சம்பவம்-யாழில் சிக்கிய மனைவியும் காதலனும்

 

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டதாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்