எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலை அடுத்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது இதனால் இலங்கையும் எரிபொருள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.
இந்த நிலையில் இறக்குமதி செலவு மற்றும் இதர செலவுகள் காரணமாக இலங்கையிலும் பாரியளவில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன.
இவ்வாறு உயர்த்தப்பட்ட எரிபொருள் விலைகளை குறைப்பதா வேண்டாமா என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்தது.
உலகளவில் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளை இலங்கையில் அமல்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுத்ததாகவும், அத்தகைய சூழல் இருந்தபோதிலும், மக்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோலில் மூன்று மாத கால மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
எரிபொருள் மானியம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதன்படி, எரிபொருள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
