TAMIL VIRAL MEDIA

கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு அதிரடியாக கைது செய்யப்பட்ட அழகிகள்

 

கொழும்பு, பம்பலப்பிட்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த தகாத செயற்பாட்டு விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 6 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓஷன் டவர் கட்டடத்தில், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் நேற்று முன்தினம் இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இந்த விடுதியை நிர்வகித்தமை தொடர்பில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பெண்கள்

மேலும் தகாத செயற்பாட்டில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த 3 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்..

கைது செய்யப்பட்ட உள்நாட்டுப் பெண்கள் 27, 35 மற்றும் 38 வயதுடைய எல்லகாவ, கலவானை மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெ


கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் 34, 41 மற்றும் 43 வயதுடைய தாய்லாந்து நாட்டுப் பெண்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட 6 பெண்களும் பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.