சனி வக்ர பெயர்ச்சி; மிகக் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவர்கள் தான்
நீதி பகவானாக அறியப்படும் சனியின் மாற்றம் என்றாலே அனைவருக்கும் அச்சம் ஏற்படும். அந்த வகையில் சனிபகவான் வக்ர பாதையில் பயணிக்கவுள்ளார். அதாவது தனது ஆட்டத்தை பின்னோக்கி செயல்படுத்தவுள்ளார்.
இது அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.
2026 ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை, மொத்தம் 138 நாட்களுக்கு சனி வக்ர நிலையில் இருப்பார். இது குறிப்பிட்ட ராசிக்கார்களின் வாழ்க்கையில் நேரடி சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
ரிஷபம்: சனியின் வக்ர பெயர்ச்சியால், ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. தேவையில்லாத செலவுகள் அதிகரித்து, பட்ஜெட் பாதிக்கப்படலாம். பண விஷயங்களில் மிகவும் கவனமாக முடிவெடுங்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறான முடிவுகளை எடுக்க நேரிடலாம். சில முக்கிய வேலைகள் தடைபடுவதால் மன அழுத்தம் நீடிக்கும். உடல்நல விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், ஒரு சிறிய அலட்சியம் கூட பெரிய சிக்கலை உண்டாக்கிவிடும். பணியிடத்தில் போட்டி அதிகரித்து, எதிரிகள் சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்: சனியின் வக்ர பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்களுக்கு குடும்ப மற்றும் நிதி விஷயங்களில் அழுத்தம் அதிகரிக்கலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் யோசித்து முடிவெடுங்கள்.பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைகள் இருக்கும். விரும்பாத சில வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
