TAMIL VIRAL MEDIA

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; 12 சிறை அதிகாரிகள் மருத்துவமனையில் ; 15 பேர் உயிரிழப்பு

 

நீர்கொழும்பு சிறைச்சாலை உயிரிழப்பு 15 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) காலை பெரும் வன்முறையாக உருவெடுத்ததில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


நேற்று நள்ளிரவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சூழல், இன்று காலை மீண்டும் சீர்குலைந்து, கைதிகளின் திட்டமிட்ட தாக்குதலால் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திலிருக்கும் அறிவித்துள்ளார்

இன்று காலை திட்டமிட்டு நடத்திய தாக்குதல்


இன்று (6) நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மேலும் 50க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.


நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று இன்று காலை திட்டமிட்டபடி நடத்திய தாக்குதல்களினாலேயே இந்த மோதல் வெடித்துள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவும் நேரிட்டது.


நேற்று (05) சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை நள்ளிரவளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த பின்னணியிலேயே, இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.