TAMIL VIRAL MEDIA

8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்! காரணம் யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க! நீதி கேட்டு போராடும் தந்தை!

 

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துசெல்வி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.


கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் பிரிந்தனர். முத்துசெல்வி தனது குழந்தைகளுடன் விளாத்திகுளம் அருகே மாமுனியபுரத்தில் தனியாக வசித்து வந்தார்

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முத்துமுருகன் என்பவருடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பழக்கம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.


இந்தச் சூழலில், முத்துசெல்வியின் மகள் (13 வயது) அருகிலுள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியில் வகுப்பறையில் மயக்கமடைந்த நிலையில், ஆசிரியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவப் பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும், கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் முத்துமுருகன் சிறுமியைத் துன்புறுத்தியதாகத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை தங்ககுமார், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்துமுருகன் மீது புகார் அளித்தார். போலீசார் POCSO சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.


ஆனால், இதுவரை குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தங்ககுமார் கண்ணீருடன் மனு அளித்துள்ளார்.


இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


English Summary : In Thoothukudi district, a 13-year-old girl studying in 8th standard fainted at school and was admitted to hospital. Doctors found her pregnant. Her father alleged that his estranged wife's close associate was involved in the incident. He filed a complaint at Vilathikulam All Women Police Station under relevant laws and submitted a petition to the District Superintendent of Police seeking immediate action. The case has created concern in the area.