TAMIL VIRAL MEDIA

மீண்டும் அரசவிடுமுறை சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

 

இந்து மக்கள் தமது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் புனிதமான ஆடி அமாவாசை தினத்தை, பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு சர்வதேச இந்துமத பீடம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

​சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை விரத நாள் எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரவுள்ள நிலையில், அன்றைய தினத்தை விடுமுறை நாளாக அறிவிப்பது இந்து மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


​ஆடி அமாவாசையின் முக்கியத்துவம்:

​ஆடி அமாவாசை தினமானது, உயிர்நீத்த முன்னோர்களுக்காக விரதம் இருந்து, நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்து தான தர்மங்கள் வழங்கி, சிவ வழிபாடு செய்யும் ஒரு மிக முக்கியமான புண்ணிய தினமாகும். இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் இந்து மக்கள் இந்த தினத்தை மிகவும் பக்திபூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர்.


​விடுமுறை கோரிக்கையின் நோக்கம்:

​இந்து மதத்தைச் சேர்ந்த அரச ஊழியர்கள், தனியார் துறையினர் மற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் சிரமமின்றி விரத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, அன்றைய தினத்தைப் பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என பீடம் கோரியுள்ளது. இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்படுவது இந்து மக்களுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு விடயமாக இருக்கும் என்று சர்வதேச இந்துமத பீடம் மேலும் குறிப்பிட்டுள்ளது.