TAMIL VIRAL MEDIA

சற்றுமுன் வங்கிகளில் வைப்பு வைக்கப்பட்ட பணம் நாட்டுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

 

2026 ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.


அந்தவகையில் ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03.07.2026) முதல் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர்களுக்காக மொத்தம் 3,108,805,000.00 ரூபாய் பணம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோர்களுக்காக 380,695,000.00 ரூபாய் பணம் அவர்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.