TAMIL VIRAL MEDIA

லண்டனிலிருந்து யாழ் வந்த குடும்பப் பெண் தற்கொலை முயற்சி; அம்பலமான கணவனின் மற்றுமொரு முகம்!

 

லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 33 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றதாக தெரியவ்ருகின்றது.


குறித்த லண்டன் வாழ் பெண், தனது சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு வந்த போதே இச் சம்பவம் இடம்பற்றுள்ளது.

பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட பின் அன்று மாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கழற்றி வைத்திருந்த மனைவியின் 40 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளது.

கழற்றி வைத்திருந்த நகைகளை அடுத்த நாள் எடுக்கச் சென்ற போது அங்கு தான் வைத்தி இடத்தில் இருந்து நகைகள் காணாமல் குறித்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். தங்கியிருந்த வீட்டில் கணவனை விட்டுவிட்டே மனைவி தனது சகோதரியின் வீட்டில் தனது இரு பிள்ளைகளுடன் சம்பவ தினம் இரவு நின்றுள்ளார்,


இவர்கள் தங்கியிருந்த வீடு புலம்பெயர் நாட்டில் வாழும் இவர்களது நெருங்கிய உறவினர்களின் வீடு என கூறப்படுகின்றது. வீட்டைச் சுற்றி CCTV பூட்டப்பட்டிருந்த நிலையில், நகைகள் காணாமல் போனமை தொடர்பில் விவவியபோது கணவன் தனக்கு எதுவுமே தெரியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வீட்டின் CCTV காட்சிகளை பரிசோதனை செய்த போது மனைவியும் பிள்ளைகளும் வீட்டிலிருந்து வெளியேறி சிறுது நேரத்தில் CCTV துண்டிக்கபட்டிருப்பது தெரியவந்தது.


அதன் பின் அடுத்தநாள் காலை 7 மணியளவிலேயே CCTV மீண்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளது.


இதனால் கணவன் மீது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதனையடுத்து அயல் வீட்டில் பூட்டியிருந்த CCTV காட்சிகளை பரிசோதித்த போது மற்றொரு அதிர்ச்சி மனைவிக்கு காத்திருதது. அயல் வீட்டு CCTV காட்சியில், குறித்த வீட்டுக்கு மாலை வேளையில் வந்த பெண் ஒருவரை கணவன் வாசலில் வந்து உள்ளே கூட்டிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.

பெண் அடுத்த நாள் காலை 5 மணியளவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறுவதும் அப் பெண்ணை கணவனே கேற்றைத் திறந்து வெளியேற்றுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.


இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி அங்கிருந்து தான் தங்கியிருந்த வீட்டுக் கிணற்றுக்குள் குதித்த நிலையில் உறவுகளால் அவர் உடனடியாகக் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


வீட்டுக்கு பவன்டு சென்ற பெண்ணே நகைகளைக் களவாடியுள்ளார் என்பதும் அறியவந்துள்ளது. குறித்த பெண்ணிடம் மனைவியின் உறவுகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் பெண் தான் நகைகளை எடுக்கவில்லை என மறுத்து வருவதால் தற்போது அவரை பொலிசாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.