அனோஜன் தொடர்பில் சற்றுமுன் வெளியான சோகமான தகவல்
சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன், மரண தண்டனை விதிக்கப்படும் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக அவரது சகோதரர் சிவராசா ஹம்சிதம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
எதிர்வரும் 20 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனோஜனுக்கு அந்த நாட்டு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட நாள் முதல் தனது சகோதரனுடன் தொலைபேசியூடாக உரையாட முடிந்ததாகக் கூறிய அவரது சகோதரன், கடந்த சில தினங்களாக அவருடன் தொடர்புகொள்ள முடியாது இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், அனோஜன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தன்னுடன் தொடர்புகொண்டதாகவும் அவர் கூறினார்.
இரண்டு நாட்களாக தொலைபேசி எடுக்கவில்லை. முந்தைய நாள் இரவு அவரை அழைத்துச் சென்றுள்ளார்கள். அவர் நேற்று முன்தினம்தான் அழைத்தார். மரண தண்டனை கொடுக்கப்படும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்களாம். இந்தச் சிறைச்சாலையில் தொலைபேசி வசதிகள் இல்லையாம். அதனால், தொலைபேசியூடாகக் கதைக்க முடியாது என்றார். எல்லோருக்கும் இந்த விஷயத்தை கூறுமாறும் சொன்னார். அரசு செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்யுமாறு சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்" என அவரது சகோதரன் சிவராசா ஹம்சிதன் தெரிவித்தார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தில், 27 வயதான அனோஜன் பட்டப் படிப்பை நிறைவு செய்து, அதனுடன் தொடர்புடைய வேலைக்காகக் கடந்த ஆண்டு சௌதி அரேபியா நோக்கிச் சென்றிருந்தார்.
''அண்ணாவை நாட்டிற்கு அழைத்து வந்தால் மாத்திரமே போதுமானது. இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செய்து தரவேண்டும்," என சிவராசா ஹம்சிதன் கோரிக்கை விடுக்கிறார்.
சௌதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?
இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திற்கு, நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து குழுவொன்று பாத யாத்திரை சென்றிருந்தது. இந்தப் பாத யாத்திரை குழுவுடன், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாய் ஒன்றையும், பாத யாத்திரையில் ஈடுபட்டவர்கள் அழைத்துச் சென்றிருந்தார்கள்.