TAMIL VIRAL MEDIA

அனோஜனனுக்காக களமிறங்கிய தேரர்கள்..!

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்கு தேவையான அரச தலையீட்டை வலியுறுத்தும் நினைவூட்டல் மடல், ராமஞ்ஞய மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஸ்ரீ லங்கா ராமஞ்ஞய மகா நிகாயவின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய மகுலேவே விமலபுத்தி தேரர் மற்றும் அமரபுர மகா நிகாயவின் உத்தம மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய கரஃகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரர் ஆகியோரால் வெளியிடப்பட்ட இந்நினைவூட்டல் மடல், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, தென்னிலங்கையின் தலைமைச் சங்கநாயக வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரரால் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவிடம் கையளிக்கப்பட்டது.


மேலும், இந்து மதகுருமார் ஒன்றியத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து கலாச்சார பேரவையின் தலைவருமான கலாநிதி சிவசிறி கே. வி. கே. வைதீஸ்வர குருக்களால் இந்து சமூகத்தின் சார்பில் மற்றொரு நினைவூட்டல் மடலும் சமர்ப்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய பாகொட ஜந்தவன்ச தேரர், வணக்கத்திற்குரிய வேபதாயிர தம்மசிரி தேரர், இந்து மதகுருமார் ஒன்றியத்தின் உறுப்பினரான சிவசிறி குகதாச குருக்கள், சட்டத்தரணி தனுஜ நவரத்ன மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆர். ஏ. அமில சஞ்சீவ ஆகியோரும் கலந்துகொண்டனர்.