TAMIL VIRAL MEDIA

கொழும்பில் பெண்ணுக்கு நடந்த கொடூரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பகுதியில் உள்ள பரிசுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பொருட்களைத் திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பெண் கொடூரமாக தாக்கப்பட்டு அவரது தலைமுடி வெட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  


பெண்ணைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, பிரதான சந்தேக நபர் உட்பட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்ட குழுவினர் இன்று (18) வெலிசரா பதில் நீதிபதி முன் முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  


முதலாம் இணைப்பு 

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பொருட்களைத் திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பெண் கொடூரமாக தாக்கப்பட்டு அவரது தலைமுடி வெட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்தத் தாக்குதலின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து, முக்கிய சந்தேக நபர் உட்பட ஐந்து பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணைக் கண்டறிந்த பொலிஸ் புலனாய்வாளர்கள், சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனை

மருத்துவப் பரிசோதனைக்காக அவரை ராகம போதனா மருத்துவமனைக்கு அனுப்பவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணைகள் ராகம பகுதியை சேர்ந்த 27 வயதுப் பெண் ஒருவரும், மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலதிக விசாரணை

20, 21, 22 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இராஜங்கனை, கடவத்தை, ராகம மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வெலிசரா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக ராகம பொலிஸாரின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.