புதுச்சேரி நகரின் பரபரப்பான ராஜா தெரு பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ வெங்கடேசா லாட்ஜ்” என்ற தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வரும் ராமசாமி (வயது 42), நேற்று மதியம் தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அவரது செல்போன் திடீரென அடித்தது. அறிமுகமில்லாத ஒரு எண்ணிலிருந்து வந்த அழைப்பு.
“ஹலோ சார்... நான் டாக்டர் விக்னேஷ் பேசுகிறேன். புதுச்சேரி அருகில் உள்ள ஒரு தனியார் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நடத்தி வருகிறேன்” என்று எதிர்முனையில் இருந்தவர் அறிமுகம் செய்து கொண்டார்.
ராமசாமி ஆர்வமாகக் கேட்டார். அந்த நபர் தொடர்ந்தார்:“எங்களிடம் சிகிச்சைக்கு வரும் திருமணமான பெண்களில் பலருக்கு கணவர்களுக்கு பிரச்சனை இருக்கும்.
அப்போது நாங்கள் ரகசியமான முறையில் உதவுகிறோம். வாட்டசாட்டமான, ஆரோக்கியமான ஆண்களை ஒப்பந்தம் செய்து கொள்கிறோம். அவர்களுடன் இயற்கையான உறவு மூலம் பெண்களை கர்ப்பமாக்குகிறோம்.
பெண்களும் இதைத்தான் விரும்புகிறார்கள். செயற்கை முறைவயைிட இயற்கை முறையில் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானது என்பதால் பெண்களே முன்வந்து இதை கேட்கிறார்கள். கணவனின் சம்மதத்துடன் என்றும் இது முற்றிலும் ரகசியம். யாருக்கும் சந்தேகம் வராது.” என்றும் கூறினார்.
ராமசாமிக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்த நபர் மேலும் சொன்னார்:“ஒரு முறை பதிவு செய்தால் உடனடியாக 2 லட்சம் ரூபாய் முன்பணம். மொத்த சம்பளம் 25 லட்சம் வரை. ஆனால் பதிவு கட்டணம் 50,000 ரூபாய் மட்டுமே. அதை கூகுள் பே QR கோடு மூலம் அனுப்புங்கள்.”
“கரும்பு தின்ன கூலியா?” என்று மனதுக்குள் சிரித்த ராமசாமி, உடனே தன் பெயரை பதிவு செய்ய சம்மதம் தெரிவித்தார். QR கோடு வந்தது. 49,500 ரூபாய் அனுப்பினார். மீதி 500 ரூபாய்க்கு இன்னொரு QR கோடு வந்தது.
உடனே முதலாளி முருகன் (லாட்ஜ் உரிமையாளர்) அருகில் இருந்ததால், “சார், இந்த QR கோடு... 500 ரூபாய் அனுப்புங்கள். நாளை நான் தருகிறேன். 50 ஆயிரம் பதிவு கட்டணம். இன்னும் இரண்டு நாளில் 2 லட்சம் வரும்!” என்று சொன்னார்.
முருகன் சந்தேகப்பட்டார். “என்ன விஷயம்?” என்று விசாரித்தபோது ராமசாமி முழு விவரத்தையும் சொன்னார். உடனே முருகன் அந்த செல்போன் எண்ணுக்கு அழைத்தார். எதிர்முனையில் “ஹலோ” என்று ஒரு வார்த்தை கூட பேசாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் அழைத்தபோது போன் “ஸ்விட்ச் ஆஃப்” என்று காட்டியது.
உடனே முருகன் ராமசாமியிடம் விசாரித்து முழு உண்மையை அறிந்தார். இருவரும் உடனடியாக புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, QR கோடு மூலம் பணம் சென்ற வங்கிக் கணக்கை டிரேஸ் செய்யத் தொடங்கியுள்ளனர்
இந்த சம்பவம் புதுச்சேரி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “கர்ப்பம் தரும் வேலை” என்ற பெயரில் லட்சங்களை வாக்களித்து முதலில் சிறிய தொகை (500, 1000, 5000) பறித்து, பிறகு பெரிய தொகையை பிடுங்கும் புதிய மோசடி முறை இது என்கின்றனர் போலீசார்.
ராமசாமி இப்போது தலைகுனிந்து நிற்கிறார். “நான் அப்பாவி... பண ஆசையில் சிக்கினேன்” என்று கண்ணீர் வடிக்கிறார். முருகன், “என் ஊழியரை இப்படி ஏமாற்றியவர்களை கண்டிப்பாகப் பிடிக்க வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறுகிறார்.
போலீசார் எச்சரிக்கை: “பணம் சம்பாதிக்கும் வழி என்று அந்நிய எண்களில் வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம். QR கோடு மூலம் பணம் அனுப்பும் முன் 100 முறை யோசியுங்கள். எந்த ரகசிய வேலை, மருத்துவ சிகிச்சை, டோனர் வேலை என்று வரும் அழைப்புகளும் 99% மோசடிதான்
