தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் வெளியான மகிழ்ச்சித்தகவல்
கடந்த சில மாதங்களாக 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது, சந்தையில் 80 முதல் 150 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்ததால் தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 155 முதல் 165 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சந்தையில் சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 135 முதல் 145 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority - CDA) வெளியிட்ட தரவுகள் மூலம் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
