மாணவர்களுக்கு சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.
தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் ஜீலை மாதம் 24ஆம் திகதி வரை இந்த தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
