TAMIL VIRAL MEDIA

தமிழர் பகுதியை உலுக்கிய சோகம் உயர்தர பரீட்சையில் 3A சித்தி பெற்ற மாணவி தற்கொலை

 

ஏ.எல் பரீட்சையில் 3A எடுத்த மாணவி டனுஸ்சிகா தவறான முடிவு எடுத்து மரணம்!


கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் 3 ஏ எடுத்து சிறப்பு சித்தி பெற்ற இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் மூதுார் பகுதியில் பட்டித்திடல் என்னும் இடத்தைச் சேர்ந்த 23 வயதான நடேசன் டனுஸ்சிகா எனும் யுவதியே தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி மேற்படிப்பை மேற்கொண்டிருந்த போது இவ்வாறான முடிவை எடுத்திருப்பது அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் பிரதேசங்களில் இளவயது தற்கொலைகள் தற்போது அதிகரித்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.