TAMIL VIRAL MEDIA

விஜய் பதவியேற்பு விழா : நேரு உள்விளையாட்டு அரங்கில் 6,000 காவல் துறையினர் பாதுகாப்பு

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விஜய்யின் பதவியேற்பு விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இதன்படி, சென்னை காவல்துறை கமிஷனர் தலைமையில் சுமார் 6,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


நேரு உள்விளையாட்டு அரங்கின் மூன்று முக்கிய நுழைவாயில்கள் மற்றும் இரண்டு விசேட வாயில்கள் வழியாக பொதுமக்கள் மற்றும் விஐபி விருந்தினர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.


மேலும், விஜய் பயணம் மேற்கொள்ளும் பாதை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


பதவியேற்பு விழாவை முன்னிட்டு சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.